Wednesday, October 10, 2012


யார் இந்த சாதனைப் பெண்???- GUESS 

1997 ஆம்  ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் லண்டனிலுள்ள கில்டுஹால் விழாக்கோலம் பூண்டிருந்தது, அந்த மிகப்பெரிய அரை முழுவதும் அறிவாளிகள் நிரம்பி வலிந்தனர் .சிறியது அழகானது மட்டுமல்ல, ஆனால் பெரியது பெருமை மிக்கது, கம்பீரமானது என்று நிரூபித்தார்  27 வயதே நிரம்பிய ஒரு இந்திய இளம் பெண் அன்று ஒரு மிகப் பெரிய சாதனைப் படைத்தார்.அன்றைய சரித்திரத்தின் படி புக்கர்  பரிசை வென்ற இளையவர் என்ற வரலாறு படைத்தவர். அறிமுக நாவலுக்காக பெருமை மிகு இலக்கியப் பரிசு பெற்றவர்களில் முதல் பெண்.போக்கர் பரிசை வென்ற முதல் முழுமையான இந்தியர் இந்த அழகான தேவதைதான். இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, இங்கேயே வேலையும் செய்து வருகிறார். இவருடைய எழுத்துக்களில் பெரும்பாலும் வற்றிய வயிறும், ஓட்டியக் கன்னமும் , பற்றிய வறுமையும் கொண்ட கடைக் கோடி இந்திய பாமரனைக் காணலாம். வங்காள இந்து தந்தைக்கும், கேரளா கிறிஸ்தவ தாய்க்கும் 1962ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தார்.தனது முதல் நாவலுக்காக அதிகத் தொகையை முன்பணமாகப் பெற்ற ஒரே இந்திய நாவல் ஆசிரியர் இவராகத்தான் இருக்க முடியும். கலாச்சாரத்தின் பால் முரண்பாடு கொண்டாலும் கருத்தில் மிகுந்த தெளிவு கொண்டவர்." In Which annie it thoose one", Electric Room  போன்ற படங்களுக்கு  திரைக்கதை எழுதியதன் மூலம் அங்கீகாரம் பெற்றவர். இவர் எழுதிய  God of Small Things  என்ற நாவலே புக்கர்  பரிசை வென்றது.    பல சமூகப் போராட்டங்களில் தன்னை முன்னிறுத்தி இன்று இந்தியாவின் தலை சிறந்த பெண்மணிகளில் ஒருவராக சிறந்து விளங்கும் இவர் யார்????  
யார் இந்தப் புரட்சிப் பெண்???!!!!!!!

பரத நாட்டியக் கலையில் ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கிய பாரதம் போற்றும் பெண்மணி, 1904 ஆம் நீலகண்ட சாஸ்திரி- சேஷம்மாள் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார்.,நீன்லகண்ட சாஸ்திரி அடையாறிலுள்ள தியோசபிகல் சொசைட்டியின் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டார். அப்பொழுது பிரம்ம ஞான சபையின் தலைவராக இருந்த அன்னிபெசண்ட்டிடம் உதவியாக இருந்தவர் ஆங்கிலேய டாக்டர் அருண்டேல், நீலக
ண்ட சாச்த்திரியினுடைய மகளின் துறுதுறுப்பும் அழகும் அருண்டேலை ஈர்க்க, 16 வயதே ஆன அந்த பெண்ணிடம் தம் காதலை சொன்னார்.,பல்வேறு சிக்கல்களைக் கடந்து 40 வயது ஆன அருண்டேல் அவரை மணந்தார் .,அதன் பிறகு உலக நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இருவரும் ரஷ்யாவில் பாலே நடனத்தின் பால் ஈர்க்கப்பட்டார், பிறகு இந்தியா திரும்பிய உடன் பரத கலையின் மீது ஆர்வம் கொண்டு பாரதத்தை கற்கத் துவங்கினார்.தனது 31 வயதில் பிரம்மா ஞான சபையில் தனது பாரத நாட்டியத்தை அரங்கேற்றம் செய்தார்.இவர் பரதம் பயின்ற காலக் கட்டத்தில் பாரதம் வெறும் தேவதாசிகளுக்கு உரிய நடனமாகவே அன்று பார்க்கப் பட்டது. அதை உடைத்தெறிந்த பெருமைக்குரியவர். பிரம்மா ஞான சபையில் கலாக்ஷேத்ரா நாட்டியப் பள்ளி அன்று இவராலேயே துவங்கப் பட்டது, இன்று பரதம் உலக அளவில் தலை நிமிர்ந்து நிற்கிறது.பரதம் நம் மண்ணின் கலை என்று மார்தட்டிக் கொள்ளும் பொழுது பெருமையாகவே இருக்கிறது....யார் இந்தப் புரட்சிப் பெண்மணி???????????????

Sunday, September 30, 2012


பிறை மூடும் இரவுகளின்
பணித் தோய்ந்த 
புல்வெளியில் 
மேகங்கள் புடை சூழ 
நீயும் நானும்.......

நீளும் இரவுகள்
நீங்காத பகிர்தல்கள்
விண்மீன்கள் கூட்டத்தில் 
புதைந்து போன  
நமக்குள்ளே  புதிய
மாற்றங்கள்!!!!!!!!!!!

உன்னாலே
 உயிர் வாழ்கிறேன்...

Wednesday, September 26, 2012

VJ என்று சொல்லிக் கொண்டு சில தமிழ் தொலைக் காட்சி சேனல்களில் தமிழை கூறு போட்டு கொலை செய்யும் சில தொகுப்பாளர்களைப் பார்க்கும் பொழுது , கையில் கிடைப்பதை எடுத்து இவர்களை சவட்டி எறிந்தால் என்ன என்று தோன்றுகிறது.,நீங்கள் உங்கள் உறவுகளிடமோ, நண்பர்களிடமோ பேசும் பொழுது உங்கள் மனம் போலப் பேசிக் கொள்ளுங்கள், ஒரு பொதுத் தொலைக் காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பேசும்பொழுது உங்களுக்கு social responsibility இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம். தமிழை கொச்சைப் படுத்தி பேசும் உங்களில் சிலரை கண்டிப்பதற்கும் , கண்டனம் செய்வதற்கும் எல்லா விதத்திலும் எனக்கு உரிமை  இருக்கிறது.,உங்கள் இஷ்டம் போல தமிழை கூறு போடுவதற்கு இது ஒன்றும் உங்கள் அப்பன், தாத்தன் வீட்டு மொழியல்ல.தமிழை தமிழாகப் பேசுங்கள், அதை உச்சரிப்பதில் உங்களது அதி மேதாவித் தனத்தை காட்டாதீர்கள்,அப்படி உச்சரிக்கத் தெரியாதவர்கள் தமிழை தமிழாக மட்டுமே மிகச் சரியாக  பேசும் சில தொலைக்  காட்சிகள் இருக்கின்றன, அதனைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.தமிழ் மொழியைக் கொச்சைப் படுத்துபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவே இருக்கட்டும்.உங்களது இந்த தவறு இனியும்  திருத்திக் கொள்ளப் படவில்லை என்றால் உங்களது நேரடி தொலைக் காட்சித் தொகுப்பில் உங்களை அழைத்து  உங்களுக்கு தமிழ் மொழியின் சரியான உச்சரிப்பைக் கற்றுக் கொடுக்கவும் இங்கு ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது!!!!!!!, தயவு செய்து தமிழை கொச்சைப் படுத்தாதீர்கள் , ரத்தம் கொதிக்கிறது  !!!!!!!!!- பண்ணப் பழகு பச்சைப் படுகொலை என்றான் பாரதி- நினைவிருக்கட்டும்!!!!!!!


தவறவிட்ட ஞாபகங்கள்!!!!!

எனது 
மவுனங்க்களோடு 
ஒரு நீண்ட தூரப்
 பயணம்
அழுத்திக் கிடக்கும்
உரையாடல்களின் 
உந்துதல்..... 

எண்ணங்களை இறக்கிவிட்டு
உடலை மட்டும் தூக்கிக் கொண்டு 
கனத்த நெஞ்சத்தில்
கண்ணீர் மட்டும் மொழியாக 

எடை இழக்கும் எதுவாயினும் 
கொஞ்சம் 
இழைப்பாருங்கள் 
என் இதயமும் 
சேர்த்து!!!!

பட்டிக்காட்டு 
ஒற்றைப் பனையின்
ஊர்க் குருவியின் 
ராகம் மறந்து 
 
கூட்டுக் கிளிகள் 
ஜதிபாட 
ஓர் உயர்ந்த 
தேசத்துப் பயணம் போகிறேன் 

வயல் காட்டின்
ஆக்சிஜன் தொலைத்து
நகரத்து நச்சுக் காற்றுக்கு 
அடிமைப் பட கிளம்பிவிட்டேன்

முப்பது வருடங்கள் 
நான் சுவாசித்தக் காற்று
எனை நனைத்த 
மழைகள்
இச்சைப் படுத்திய 
ஜன்னலோரச் 
சாரல்கள் 

வானம், மேகம்,
நிலா, நதி ,மரம்
ஓடை,ஒற்றைப் பனை 
ஊரோர ஆல மரம்
அடுத்த வீட்டு ஜன்னல்
அவள் போன பாதை 
அத்தனையும் 
இறக்கி வைத்துப் போகிறேன்

இறக்கி வைக்க முடியாத 
அவள்
ஞாபகங்களோடு !!!!!!!!!!!
 

  Monday, September 24, 2012


அன்னையின் அன்பிற்கு  புராணங்களில் உள்ள சான்றுகள்:

பாண்டவர்களின் பலத்தைக் கேள்வியுற்ற காதம்பரி, பாண்டவர்கள் கவுரவர்களைத் தோற்கடித்து விடுவார்களோ என்று அச்சம் கொள்கிறாள். தன மகன் துரியோதனனை அழைத்து அவனைப் போரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அவளிடம் இருக்கும் ஒரு வரத்தை துரியோதனனுக்கு வழங்க நினைக்கிறாள். அந்த வரமானது கதாம்பரி தனது கண்களை ஆண்டுகள் பல கடந்தும் பட்டுத் துணியால் கட்டிக் கொண்டிருப்பதால் அவளுக்குக் கிடைக்கப் பெற்றது.  அதன்படி துரியோதனனை அழைத்து, அவளிடம் இருக்கும் அந்த அறிய வரத்தை அவனுக்கு வழங்க  நினைப்பதாகவும் அந்த வரத்தை துரியோதனன் பெற வேண்டுமென்றால் கதாம்பரி அவளது கண்ணைத் திறக்கும் பொழுது துரியோதனன் மீண்டும் ஒரு குழந்தையாக நிர்வாணமாக அவள் முன்  நிற்க வேண்டும் என்றும் , அதன்படி கதாம்பரி அவளது கண்களை திறந்து அவனை எங்கெல்லாம் பார்க்கிறாளோ அந்த இடங்களில் பாண்டவர்கள் அவனைத் தாக்கி வெல்ல முடியாது என்பது பொருளாகும் . ஆனால் துரியோதனன்  குழந்தையாக மாறினாலும் வெக்கம் கொண்டு இடுப்பில் ஒரு துடைக் கட்டி வந்து கதாம்பரியின் முன் நிற்கின்றான்.கதாம்பரி கண்களில் உள்ள துணியை அகற்றி அவனைப் பார்க்கும் பொழுது இடுப்புப் பகுதியைத் தவிர மற்ற எல்லாப் பகுதிக்கும் அந்த வரத்தின் அடிப்படையில் சக்தியைப் பெறுகிறான். ஆனால் இதனை அறிந்த பாண்டவர்கள் போர் நடை பெறும்போது கண்ணனிடம் இந்த உண்மையை சொல்லி துரியோதனனின் தொடைப் பகுதியில் தாக்கச் சொல்கிறான். அதன் படியே கண்ணனும் தாக்கியவுடன், துரியோதனன் அடிபட்டு கீழே சரிகிறான்.  

நிறமிழந்த நட்பு..


தீர்ந்து விடாத 
தனிமையின்
தேடல்கள் ...

 எனக்குள்ளே 
நீளும் உரையாடல் 
நிலைகொல்லாத் தவிப்போடு
மேலும் கீழுமாய்
வலமும் இடமுமாய்
நினைவின் அலைகள்
அங்கும் இங்கும் பாய்கின்றன....

கரை படிந்து 
சாயம் தோய்ந்த 
எனது அறையின் சுவர்களே 
என்றும் 
உற்ற தோழனாய் 
எதுவாகினும் சகித்துக் கொள்ளும்
என்னுயிர் நண்பனாய்...

சில நேரங்களில் 
தாலாட்டும் 
அன்னையாய்...

மறக்கடிக்கப்பட்ட சோகங்கள்
என் மனக்கதவை 
மீண்டும் வருடும்போதும்
துக்கங்கள் தலைக்கேறி
என் உயிருக்கு
விடை கோரும்போதும்...

புயலடிக்கப் பட்ட 
சுழலுக்குள்  சிக்கி 
மரணத்தின் விளிம்புகளை 
கண்டு மீண்டெழுந்த மனிதனாய்... 

கண்ணீர் கரைத்த 
கண்களுக்கு
தண்டனையும் ஆறுதலும்
எதுவாயினும்
அவ்வப்போது  உன் 
சாயத்தை என்மீது பூசிக் கொள்கிறேன் 

அதன் மீது 
நான் கொண்ட நட்பால் 
நிறமிழந்த 
என் படுக்கையறை 
சுவர்கள்!!!!!!!!